Thursday, March 31, 2011

முன்று எழுத்து......



உயிர்...மூன்றெழுத்து...! உயிர் தந்த ,அன்னை ...மூன்றெழுத்து...! அன்னை காட்டிய அன்பு ..மூன்றெழுத்து...! அன்பினால் உருவாகும் ..கனிவு ,மூன்றெழுத்து...! கணிவினால் ,உருவான பணிவு..மூன்றெழுத்து...! பணிவு ஆல் உண்டான ..தகுதி ..மூன்றெழுத்து...! தகுதியால் வந்த திறமை மூன்றெழுத்து...! திறமையினால் நான் அடைந்த பதவி..மூன்றெழுத்து...! பதவியினால் நான் செய்யும் கடமை ..மூன்றெழுத்து...! கடமையினால் எனை அடையும் வெற்றி...மூன்றெழுத்து...! வெற்றியினால் கிட்டும் புகழ் ..மூன்றெழுத்து...! இந்த மூன்றெழுத்தில் எல்லாம் நான் என்ற ஈரெழுத்து இருக்க காரணம் ஆன

என் அன்னை நீயே என்றும் என்
(உயிர்) முதலெழுத்து...!


Monday, March 28, 2011

இனம் ......

இனம் ......
இனம் வேண்டும்
இனம் பறவையாக வேண்டும்
இனம் மிருகமாக வேண்டும்
இனம் இயற்கையாக வேண்டும்
இனம் மனிதனாக வேண்டும்
மாறாக
மனிதன் இனமாக
உருவெடுத்தால்
மனிதனும் மனிதனால்
அழிவான்
மனிதமும் மனிதனால்
அழியும்

Friday, March 18, 2011

விவேகானந்தரின் அருளுரை

எல்லாவற்றையும் தவிர்க்கும் சக்தியைக் கொடுப்பதுதான் தியானம். “பார் அங்கே..அதோ ஒரு அழகான பொருள்” என இயற்கை கூறுகிறது. “கண்களே பார்க்காதீர்கள்!” என்று நான் கண்களுக்கு உத்தரவிடுகிறேன். கண்கள் பார்ப்பதில்லை. “இதோ நல்ல நறுமணம், இதை முகர்ந்து பார்” என இயற்கை கூறுகிறது. “அதை முகராதே!” என நான் என் மூக்கிற்கு உத்தரவிடுகிறேன். மூக்கு அதை முகர்வதில்லை. இயற்கை ஒரு கொடிய காரியம் செய்கிறது. என் குழந்தைகளில் ஒன்றைக் கொல்கிறது. “இப்போது என்ன செய்வாய்? மடையா உட்கார்ந்து அழு. துக்கத்தின் ஆழத்திற்குப்போ!” என்று இயற்கை சொல்கிறது. ஆனால் நான் சொல்கிறேன், “நான் போக வேண்டிய அவசியம் இல்லை!” என்று குதித்து எழுந்து சுதந்திரமாக இருக்கவேண்டும். இதைப் பயிற்சி செய்து பாருங்கள். ஒரு நொடையில் தியானத்தில் இந்த இயற்கையை நீங்கள் மாற்ற முடியும். இந்த சக்தி உங்களுக்குக் கிடைத்தால் அதுவே பரலோகமாகாதா? சுதந்திரமாகாதா? தியானத்தின் சக்தி அதுதான்

Thursday, March 17, 2011

நறுமுகை உங்களை வரவேற்கிறது ...