கவிதை


 

 அவள் அதிசியம்... 

 தட்டிகொடுத்து
ஆறுதல் சொல்லும்
பலரில்..... என்னவள்
மட்டும்
என் உள்ளதை
கட்டித்தழுவி
அறுதல்
சொல்கிறாள்!







மகிழ்ச்சி

மற்றவர்களின்
மகிழ்ச்சியை
தன
மகிழ்ச்சியாக
நினைத்து
மகிழ்பவன்
உண்மையான
மனம் உள்ளவன் 


.மூன்றெழுத்து...!

உயிர்...மூன்றெழுத்து...! உயிர் தந்த ,அன்னை ...மூன்றெழுத்து...! அன்னை காட்டிய அன்பு ..மூன்றெழுத்து...! அன்பினால் உருவாகும் ..கனிவு ,மூன்றெழுத்து...! கணிவினால் ,உருவான பணிவு..மூன்றெழுத்து...! பணிவு ஆல் உண்டான ..தகுதி ..மூன்றெழுத்து...! தகுதியால் வந்த திறமை மூன்றெழுத்து...! திறமையினால் நான் அடைந்த பதவி..மூன்றெழுத்து...! பதவியினால் நான் செய்யும் கடமை ..மூன்றெழுத்து...! கடமையினால் எனை அடையும் வெற்றி...மூன்றெழுத்து...! வெற்றியினால் கிட்டும் புகழ் ..மூன்றெழுத்து...! இந்த மூன்றெழுத்தில் எல்லாம் நான் என்ற ஈரெழுத்து இருக்க காரணம் ஆன

என் அன்னை நீயே என்றும் என்
(உயிர்) முதலெழுத்து...!

இனம் ......

இனம் ......
இனம் வேண்டும்
இனம் பறவையாக வேண்டும்
இனம் மிருகமாக வேண்டும்
இனம் இயற்கையாக வேண்டும்
இனம் மனிதனாக வேண்டும்
மாறாக
மனிதன் இனமாக
உருவெடுத்தால்
மனிதனும் மனிதனால்
அழிவான்
மனிதமும் மனிதனால்
அழியும்

கலாச்சாரம்
நேர்கோட்டுக்  கூட்டங்கள்
உருவமைத்த
அடுக்குமாடிச் செவ்வகங்களும்
கூரை முக்கோணங்களும்
நீலத்தில் அளைந்து கரையும்
பார்வைகளுக்கு ஓர் இடையூறாய்
கண்ணாடி யன்னல்களும்.

அறையுள்
இயந்திர சலிப்புடன்
நேர்கோடு வரைந்து வைத்த
ஆதாரத் திண்மங்களாய்
மேசை, தாள் கோப்புப் புத்தகங்களோடு
விடைத்த அவன் .

திட நிலைச்  சுவர்கள்
நாலு மூலைகலில் நெட்டையாய்க் குந்தியிருந்தன.

இருத்தலின்
சுவாரசியம் அருக
அடைபட்ட நிலைக்கதவின்
பிடிதனை வளையத் திருகித்
திறந்த போது
சிரித்துக் கலகலத்துப்
பேர் வெள்ளமாய்க் கரை உடைக்கும்
புகுந்த
நேர்கோட்டிர் பயணமுறா ஒளிக்கற்றைகள்.


துப்புக் கெட்ட  அரசியல்வாதிகள்.... 
வாய்ப்பை விட்டு விட்டு
இப்போது வாலை துழாவவும்
யாரும் இன்றி !

ஈழ அமைதிக்கு
வாய்ப்புகள் வாய்த்தபோது
வாக்குகளை மட்டும் பார்த்துவிட்டு
வஞ்சித்து விட்டார்கள் !

அடுத்த தேர்தலில்
வால் நுனியை
மீண்டும் பிடித்து விடுவார்கள்
துப்பு கெட்ட அரசியல் வாதிகள் !

மௌனமாய் அழுகிறோம் ....
காந்தி தேசத்தில்

கோர ‘கோட்சே’ ;
புத்தர் தேசத்தில்
ராஜ  பக்க்ஷே !

இனம் இரையாகிறது
அதைப் பார்த்து
ஒன்றும் செய்யமுடியாமல்
மனம் கறையாகிறது !!

காடுகளில் பயிற்சி
கவளவாய் சோறு ;
கண்களில் வெறி
மாய்ந்தே போனாலும்
மானமே பெரிது ;
மண்னே மானமென
வாழ்ந்த வீரர்கள் ;
கொன்று குவிக்கப்பட்டு
கிடத்தப் படுகிறார்கள்
புத்தர் காலடியில் !!


சொர்க்கம் படைப்போம் பூமியில்..
வெற்றி
வியர்வையின் பலன்..
பட்டை தீட்டினால் தான்
வைரம் மின்னும்..
        


 பாரதி கவிச்சாரதி
எண்ண மெனும் தேரில் வண்ணம் மாறா
வாழ்வில் நீ வாழ்கிறாய் கவியே நீ வாழ்கிறாய்
கட்டவிழ்ந்த நதியிடத்தும் காடு மலை
மேட்டிலும் சொட்டு மலர் தேனிலும் நீ

 புன்னகை
புன்னகை செய்வதற்கு
மட்டுமே உங்கள் இதழ்களை
பயன் படுத்துங்கள்
மற்றவர்கள் மனம்

 
வாழும் வகை
மலரோடு தங்கை மாங்கல்ய தாரகை - தாரம்
இழந்தாலென்ன தரம் குறையா தங்கை
கிளை வெட்ட வெட்ட தழைக்கிது மரம்
துணை வெட்ட வெட்ட உலருது மனிதம்

தமிழுக்கு அமுதென்று பெயர்
எம்மொழியும் கண்டிராத
செம்மொழியாம் தமிழ்
இன்னிசைக்கு இசைபாடும்
இன்பமயம் இன்பத்தமிழ்